முற்பிறப்பு எப்படி பார்ப்பது


Past life regression – மூன்று பிறப்புகள்

இது உண்மையா அல்லது பொய்யா என்ற உண்மை தெரியாமல் அல்லது ஆழ்ந்து அறியாமல் பலரும் பல கருத்துக்கள் கூறி உள்ளார்கள். நன்றி உங்கள் அனைவரினதும் கருத்துகளுக்கும். இந்த ஒலிப்பதிவை நம்பாதவர்களுக்கு ஒரு சிறிய குறிப்பு. Past life regression என்ற சொற்களை கூகிளில் தேடுங்கள். அதில் வரும் தகவல்களை ஆழ்ந்து படியுங்கள் முடிந்தால் இதைப் பயிற்ச்சி செய்யும் முறையைப் பழகுங்கள். பின்னர் உங்களுக்கு இதன் உண்மைத் தன்மை புரியும். உங்களைப் போல்தான் அடியேனும் இதை முதலில் நம்பவில்லை ஆதலால் நீங்கள் இதை நம்பாமல் இருப்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்துகளும் இல்லை. ஆனாலும் இந்தப் பயிற்ச்சியை உரிய முறையில் வெளிநாடு பயின்ற பின்னர் தான் இதில் உள்ள உண்மைகளைப் புரிய முடிந்தது. இந்த முறை வெளிநாடுகளில் மிகவும் ஒரு பிரபல்யமான முறை. யாரும் இந்த முறைகளைப் பயின்று உண்மைத் தன்மையினை அறிந்து கொள்ளலாம். உரிய முறையில் இந்தப் பயிற்ச்சியை பழகாமல் யாரிலும் சோதித்துப் பார்க்காதீர்கள். இதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

அடியேனும் ஆரம்பத்தில் கடவுள் எதிர்பாளன்தான். கடவுள் இல்லை என்று வாதாடுவதிலும் இப்படியான விடயங்களை உண்மையை அறியாமல் சிறுபிள்ளைத்தனமான எதிர்த்து பேசுவதிலும் முன் நின்று செயல் பட்டவன் தான். ஆனாலும் அப்பன் சிவன், ஆத்தா கருணையினால் வாழ்வில் ஏற்பட்ட சில நிகழ்வுகள் அடியேனை முழுவதுமாக மாற்றி விட்டது. அதன் பின்னர் எதைப் பொய் என்று வாதிடேனோ அவற்றை அறிவதிலும் ஆய்வு செய்வதிலும் அடியேனது நிறையக் காலங்களை செலவு செய்தேன். அப்போது பழகிய ஒரு முறைதான் இது.

இந்த ஒளிபதிவைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு: இந்தியாவிற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பொழுது, சில உறவுகள் இந்த முற்பிறப்பு பார்க்கும் பயிற்ச்சி முறையை அவர்கள் அறிய விரும்பிக் கேட்டதால், அவர்களுக்கு பயிற்ச்சி கொடுக்கும் போது, அவர்களில் ஒருவரை இந்த நிலைக்கு எடுத்துச் சென்று அவர்களின் முற்பிறப்பு உண்மைகளை பார்க்கும் போது எடுத்த ஒளிபதிவைத் தான் நீங்கள் தற்போது பார்க்கிறீர்கள். இந்த ஒளிபதிவில் உள்ளவர் கூறும் எந்த விடயமும் அவர் ஆழ்ந்த நிலையை விட்டு வெளியில் வந்தவுடன் அவருக்கு ஞாபகம் இருக்காது இருக்கவும் கூடாது.

Be the first to comment on "முற்பிறப்பு எப்படி பார்ப்பது"

Leave a comment

Your email address will not be published.


*