தை மாதத்தில் இருந்து சித்தர் நூல்கள் பகிரப்படும்

வணக்கம் எனது உறவுகளே,

சில காலங்களாக எமது செயல்பாடுகள் முழுவதையும் நிறுத்தி வைத்திருந்தோம். இதனால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள்.

உங்களுடன் மீண்டும் இணைந்து பயணிப்பதற்குரிய காலம் வந்துள்ளதால் மீண்டும் நமது செயல்பாடுகளைத் தொடங்கவுள்ளோம்.

அதன் முதற்கட்டமாக எம்மிடம் உள்ள நூற்களை தமிழ் மீதும் சித்தர்கள் மீதும் சிவன் மீதும் அம்மன் மீதும் உண்மையான அன்புள்ளவர்களிடமும் பழைய நூல்களை மின்னூலாக்கிப் பகிர விரும்பும் உறவுகளிடமும் கீழ் உள்ள விதிமுறைகளை ஏற்றுக் கொள்பவர்களிடம் மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.


🔔🔔அடிப்படைக் கேள்விகள் 🔔🔔

தயவு செய்து கீழ்வரும் ஐந்து கேள்விகளுக்கும் அணியில் பதில்களை தெரியப்படுத்துங்கள்.

1) உங்கள் முழுப் பெயர் (உங்கள் பெயர், அப்பா பெயர்) ஊர் போன்ற விபரங்களையும்

2) உங்கள் படத்தை நிர்வாகிக்கு மட்டும் அனுப்பவும்

3) நீங்கள் நூல்களைப் பாதுகாக்க என்ன விதமான பங்களிப்பை செய்வீர்கள் என்பதையும்

4) சிவபெருமானை இறைவனாகவும் தமிழை இறை மொழியாகவும் சித்தர்களையும் முழு மனதாக ஏற்கிறீர்களா என்பதையும் தெரியப்படுத்துங்கள். ஏற்பவர்களுக்கு மட்டுமே இந்த அணியில் பங்குகொள்வதற்கு அனுமதி உறவுகளே.

5) சிவன் சித்தர் அணிகளில் பகிரும் எந்த நூல்களையும் கெட்டவர்கள் கைகளிலும் சிவபெருமானையும் சித்தர்களையும் தமிழையும் முழுமனதாக ஏற்காதவர்களிடம் எந்த விதத்திலும் கொடுக்க மாட்டோம் என்று சத்திய வாக்கு தாருங்கள்.

மேல் உள்ள கேள்விகளுக்கு பதில் கூறாத உறவுகளும் ஏற்றுக் கொள்ளாத உறவுகளும் முன்னறிவிப்பு இல்லாமல் அணிகளில் இருந்து நீக்கப்படுவார்கள்.

அத்துடன் இதுவரை நாம் பார்வையாளர்களாக இருந்தது போதும் உறவுகளே. பார்வையாளராக இருந்ததால் தான் நாம் இழந்தது அதிகம். ஆதலால் இனத்தின் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதற்காக நம்முடன் இணைந்து பங்கு கொள்பவர்களே நமது இனத்திற்கு வேண்டும். ஆதலால் உங்கள் பங்களிப்பு நமது இனத்திற்கு ஏதோ ஒரு வகையில் இருக்க வேண்டும்.

இந்த அணியில் உள்ளவர்கள் கீழ் உள்ள ஏதாவது ஒரு செயல் திட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும்.

🔔🔔செயல்திட்டங்கள்🔔🔔

1) ஒன்றில் பதிப்புரிமை இல்லாத நூல்களை அல்லது ஓலைச்சுவடிகளை பகிருங்கள்

2) அல்லது நூல்களைத் தட்டச்சு செய்ய உதவுங்கள்

அத்துடன் இங்கு பகிரும் நூல்களைப் படித்து
சிவன் சித்தர் முகநூலின் கீழ் இயங்கும் அணிகளில் நீங்கள் படித்த தகவல்களைப் பகிருங்கள். பகிரும் போது நூலின் பெயரையும் பக்கத்தையும் பாடலின் படத்தையும் சேர்த்துப் பகிருங்கள்

அணியில் உள்ள ஒவ்வொருவரும் எந்த விதமான செயல்திட்டங்களில் பங்கு கொள்ள விருப்பம் என்பதை தெரியப்படுத்துங்கள்.

🔔🔔மேல் உள்ள செயல்திட்டங்களில் பங்கு கொள்ளாத உறவுகள் அணிகளில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல் நீக்கப்படுவார்கள்🔔🔔

எந்ந ஒரு கேள்வியையும் தவிர்த்துப் பதில் கூறாதீர்கள்.

விதிமுறைகள்:

1) பதிவுகள் அனைத்தையும் தமிழில் பதியுங்கள். தமிழ் மட்டுமே இந்த அணியில் அனுமதி.

2) நூல்களைப் பகிரக் கேட்கும் உறவுகள் அந்த நூல் சார்ந்த தகவலைக் கூறிவிட்டுக் கேட்கவும்

3) விவாதங்களுக்கு இந்த அணியில் அனுமதி இல்லை

4) நூற்கள் சாராத பதிவுகள் இந்த அணியில் அனுமதி இல்லை

தமிழ் நமது உயிர்🙏

இப்படிக்கு
நிர்வாகம்

மேல் கூறியவற்றை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும் கீழ் உள்ள இணைப்பின் மூலம் இணைந்து கொள்ளுங்கள்.

https://t.me/sivansiththarnoolkal

Be the first to comment on "தை மாதத்தில் இருந்து சித்தர் நூல்கள் பகிரப்படும்"

Leave a comment

Your email address will not be published.


*