சித்தர்கள் பார்வையில் தமிழின் பெருமை

சித்தர்களும் தமிழும்

தமிழின் பெருமை – தமிழ் அவமானம் இல்லை அவள் நமது அடையாளம்.

சித்தர்களின் பூசை விதிகள் நூலில் தமிழின் பெருமைகள் பற்றிச் சித்தர் கூறி உள்ளார்.

சத்திய உலகம் உட்படக் கீழ் உலகங்கள் ஏழிலும் மேல் உலகங்கள் ஏழிலும் பேசப்படும் மொழி என்றால் அவள் தான் தமிழ்

1008 அண்டங்களிலும் பேசப்படும் மொழி தமிழ்

வாலை அம்மனை வழிபடத் தேவையான மொழி தமிழ்

கடவுகளை அறியத் தேவையான ஒரு மொழி தமிழ்

🔥🔥🔥🔥🔥

தமிழின் பெருமையைத் தெரிந்து கொண்டு தமிழைப் காதலிப்போம் தமிழை வளர்ப்போம் தமிழில் பேசுவோம்..

சிவபெருமான் உருவாக்கிய மொழி தமிழ்

சிவபெருமான் தனது கையால் எழுதிய மொழி தமிழ்: திருவாசகம்

சிவபெருமான் இறையனார் அகப்பொருள் என்ற தமிழ் இலக்கண நூலைத் தமிழுக்காக உருவாக்கினார்

சிவபெருமான் பாண்டிய மன்னனாக வந்து ஆண்ட இனம் தமிழர்கள், பேசிய மொழி தமிழ்

முதல் சங்கத்தில் 49 புலவர்களுக்குத் தலைமைப் புலவராக இருந்து தமிழை வளர்த்தார்

சிவபெருமான் நாயன்மார்கள் பின்னால் அலைந்து பாடக்கேட்டு மகிழ்ந்த மொழி தமிழ்

அகத்தியச் சித்தர் அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலைத் தமிழுக்காக உருவாக்கினார்

வேதங்கள் முதலில் உருவான மொழி தமிழ்

மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி தமிழ்

தமிழில் இருந்தே எல்லா மொழிகளும் பிரிந்தன

சித்தர்கள் பேசும் மொழி

தமிழ் ஒரு தெய்வ மொழி

ஆகவே தமிழா இனிமேல் தமிழில் பேசு. தமிழுக்கு காவலனாக தூணாக இருந்து தமிழை வளர்ப்போம்.

தமிழா உனது கடவுள் சிவபெருமான் . உனது மொழி தமிழ். உனது சமயம் சைவம்.

தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி

🔥🔥🔥🔥🔥🔥🔥

நீங்கள் தமிழில் பேச வெட்கப்படுகிறீர்களா? அப்படியானால் இதையும் கேளுங்கள்…

சிவபெருமான், உமாதேவி, திருமால், சித்தர்கள், தேவர்கள் உட்பட விரும்பிக் கேட்கும் பேசும் ஒரு மொழி என்றால் அது தமிழாகத்தான் இருக்கும். இப்படிச் சித்தர்கள் கூறுகிறார்கள்

முக்திக்கு வழிகாட்டும் மொழி தமிழ்

தமிழில் தெய்வங்களைப் பாடினால் பிறவி வினையை அகற்றுவார்கள். நேரில் வந்து காட்சி தருவார்கள்.

நடக்க இருக்கும் ஒரு பெரிய அழிவிற்குப் பிறகு அழியாமல் இருக்கப் போகும் ஒரே ஒரு மொழி என்றால் அவள் தமிழாகத்தான் இருப்பாள். காகபுசுண்டர் சித்தர் கூறுகிறார்

அவள் கடவுளின் மொழி. நமது உயிர். நமது உணர்வு. எல்லா மொழிகளுக்கும் தாய் அவள்.

தமிழ் மொழியின் பெருமையையும் தமிழர்களின் பெருமையை அறிய வேண்டும் என்றால் சித்தர் நூல்களை அழியாமல் காப்பாற்றி எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்களும் படியுங்கள்.

Be the first to comment on "சித்தர்கள் பார்வையில் தமிழின் பெருமை"

Leave a comment

Your email address will not be published.


*