உங்கள் துன்பத்திற்கு தற்கொலை ஒருபோதும் முடிவு இல்லை

துன்பத்தின் உச்சியில் வாழப் பிடிக்காமல் மரணிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் வந்தால் ஒரு வாரம் உங்கள் சுற்றாடலை விட்டு வெளியேறி எங்காவது ஊரில் உள்ள சிவன் அல்லது அம்மன் அல்லது முருகன் கோயிலுக்கு சென்று தனிமையில் பரதேசியாக வாழுங்கள். அந்த வாரம் மட்டுமாவது சிவனையும் அம்மனையும் உங்கள் அம்மா அப்பாவாக
ஏற்றுக் கொண்டு மனம் உருகி எந்த நேரமும் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள். நிச்சியமாக உங்களுக்கு ஒரு நல்ல ஒரு முடிவு கிடைக்கும்.

வாழ்வதை விட இறந்த பின்னர் அனுபவிக்கும் துன்பமும் தனிமையும் மிகவும் கொடூரமானது. அத்துடன் திரும்பவும் நீங்கள் பிறந்து விட்ட குறையை மீண்டும் அனுபவிக்க வேண்டும். இறக்க துணிந்த நீங்கள் வாழ வேண்டும் என்று தைரியமாக நினைத்து விட்டால் நீங்கள் வாழ்கையின் ஒரு எல்லையை தொட்டே விடுவீர்கள்.

அதுவும் முடியாவிட்டால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் அணிலாக இருந்தாவது உங்கள் துன்பதில் இருந்து மீண்டு வர முடிந்தளவு முயற்சி செய்வோம்.

Be the first to comment on "உங்கள் துன்பத்திற்கு தற்கொலை ஒருபோதும் முடிவு இல்லை"

Leave a comment

Your email address will not be published.


*